News May 2, 2024
இந்தியாவின் தீவுகளைக் கண்டறிந்ததே நான் தான்!

இந்தியாவுக்குச் சொந்தமான தீவுகளை சாட்டிலைட் சர்வே மூலம் தான் கண்டறிந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜூனாகத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம் லீக்கின் மொழியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம். ஆனால் அதனை மீண்டும் கொண்டு வருவோமென அரச குடும்பத்தினர் வெளிப்படையாகக் கூறி வருவதாகவும் சாடினார்.
Similar News
News January 29, 2026
பாஜக வந்த பிறகு தற்கொலைகள் அதிகரிப்பு: CM

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிய பாகுபாட்டை ஒழிப்பதற்காக UGC விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை குறிப்பிட்ட அவர், தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது என்றார். மேலும், உயர்கல்வி நிறுவனங்களை RSS ஆதரவாளர்கள் வழிநடத்தினால் சமத்துவக் குழுக்கள் சுதந்திரமாக செயல்படுமா எனவும் கேட்டுள்ளார்.
News January 29, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.29) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ₹16,800-க்கும், சவரனுக்கு ₹9,520 அதிகரித்து ₹1,34,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.