News July 5, 2025
நானே முதல்வர் வேட்பாளர்… அமித்ஷாவுக்கு இபிஎஸ் பதிலடி

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பல முரண்பட்ட கருத்துகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் தேஜகூ ஆட்சியமைக்கும் எனக்கூறிய அமித்ஷா, முதல்வர் இபிஎஸ் தான் எனக் குறிப்பிடாதது சர்ச்சையானது. இந்நிலையில், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, தானே முதல்வர் வேட்பாளர் என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அமித்ஷாவிற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டிச.12-ல் புதிய பயனர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, வங்கிகளுக்கு TN அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் வங்கிக் கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்காக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மினிமம் பேலன்ஸ் இல்லையென பணம் பிடிப்பது தவிர்க்கப்படும்.
News December 7, 2025
Way2News ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹40,000 சம்பாதியுங்கள்!

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோஸ் (60 seconds-க்குள்) ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
News December 7, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. நேரில் அஞ்சலி

நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேலின் மறைவுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். J&K எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த சக்திவேலின் உடல் சொந்த ஊரான திருத்தணிக்கு கொண்டு வரப்பட்டு <<18491316>>ராணுவ மரியாதையுடன் அடக்கம்<<>> செய்யப்பட்டது. அரக்கோணம் MP ஜெகத்ரட்சகன் சக்திவேலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சக்திவேலின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு இன்று நேரில் ஆறுதல் கூறினர்.


