News March 21, 2024
பலத்தை நிரூபிக்க நானே களமிறங்குகிறேன்

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன்” என்றார்.
Similar News
News August 5, 2025
கூட்டணி கட்சியினர் PM மோடிக்கு பாராட்டு

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்காக PM மோடிக்கு கூட்டணி கட்சி MP-க்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக துணிவுடன் போராடிய முப்படைக்கும் கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
News August 5, 2025
போதிய மருத்துவர்கள் இல்லை: திமுக அரசை சாடிய OPS

அரசு மருத்துவக் கல்லூரி ஹாஸ்பிடல்களில் மருத்துவரே இல்லாத அவல நிலையை திமுக உருவாக்கியுள்ளதாக OPS குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர், புதுக்கோட்டை அரசு ஹாஸ்பிடல்களில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததை மறைக்க, மற்ற ஹாஸ்பிடல்களில் இருந்து திடீரென 27 டாக்டர்களை அங்கு மாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அந்தந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியடைவதாகவும் சாடியுள்ளார்.
News August 5, 2025
10 சீட்.. திமுக கூட்டணியில் தேமுதிக?

திமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாம். கூட்டணி முடிவில் பிரேமலதா மிகவும் சஸ்பென்ஸாக காய்களை நகர்த்தி வருகிறார். திமுக கூட்டணியில் 9 சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், 12 சீட் வேண்டும் என்று பிரேமலதா அடம் பிடிக்கிறாராம். இன்னும் ஒரு சீட் கூடுதலாக கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டதாம். கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி என பேச்சு அடிபடுகிறது.