News April 4, 2024

அரசியலில் குதிக்க தயாராக உள்ளேன்

image

அரசியலுக்கு வருமாறு பொதுமக்கள் தன்னை வற்புறுத்தி வருவதாக பிரியங்கா காந்தி கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், ‘காந்தி குடும்பத்தின் உறுப்பினராக அரசியலில் இருந்து விலகியிருப்பது கடினம். அமேதியில் இரானி உள்ளிட்ட எந்தவொரு தலைவரையும் எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன். ராகுலை தேர்வு செய்யாதது தவறு என அமேதி மக்கள் உணர்கின்றனர்’ என்றார்.

Similar News

News November 10, 2025

வட பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.

News November 10, 2025

உதடுகள் கருப்பா இருக்கா? TRY THIS!

image

மென்மையான, இளஞ்சிவப்பு உதடுகளை பெற நிறைய ஈஸியான வழிமுறைகள் உள்ளன. ➤போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் ➤Lip Balm பயன்படுத்துங்கள் ➤உதடுகளை கடிப்பதை தவிர்க்க வேண்டும் ➤புகைப்பழக்கம் இருந்தால் அதனை கைவிடுங்கள் ➤தேன் & சர்க்கரையை கலந்து உதட்டில் தடவிப்பாருங்கள். அனைவருக்கும் யூஸ் ஆகட்டுமே. SHARE THIS

News November 10, 2025

திருப்பதி லட்டில் நெய்க்கு பதில் பாமாயில் கலப்படம்

image

கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திரா CM குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து SIT அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் லட்டில் நெய்க்கு பதில், அதிகமாக பாமாயில் கலந்திருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இதை சப்ளை செய்த Bholebaba Dairy நிறுவனத்தின் இயக்குநர் அஜய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!