News August 18, 2024
மனதளவில் தயாரானேன்.. ஆனால்?: நீரஜ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு மனதளவில் தயாரானாலும், உடல் ரீதியான தயார்படுத்தலில் கொஞ்சம் போதாமை இருந்ததாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். தன்னால் முடியாது என எப்போதும் நினைத்ததில்லை எனவும், தன்னுடைய அனைத்து முயற்சிகளும் அன்று வீணானதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆக.22ஆம் தேதி தொடங்கும் லாசன்னே டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 22, 2025
இளையராஜா வழக்கில் Sony தாக்கல் செய்த விவரங்கள்

சோனி, ஓரியண்ட்டல், எகோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக சென்னை HC-ல் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது, இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்கள் சோனி நிறுவனம் தாக்கல் செய்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை நவ.19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
News October 22, 2025
3 சிறப்பு ரயில்கள் ரத்து

குறைவான முன்பதிவு காரணமாக 3 சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை இயங்க உள்ள சென்ட்ரல் – கோட்டயம் – சென்ட்ரல் ரயில் (Train No:06121/06122), அக்.24, 26 தேதிகளில் இயங்கவுள்ள செங்கல்பட்டு – நெல்லை – செங்கல்பட்டு ரயில் (Train No:06153/06154), அக்.28, 29 தேதிகளில் இயங்கவுள்ள நாகர்கோவில் – சென்ட்ரல் – நாகர்கோவில் (Train No:06054/06053) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News October 22, 2025
FLASH: டியூட் படத்துக்கு வந்த சிக்கல்

தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் ’கருத்த மச்சான்’ பாடல் உள்பட 2 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தன்னுடைய அனுமதி கோராமல் தனது பாடலை பயன்படுத்தி இருப்பதாக இளையராஜா தரப்பு சென்னை HC-ல் தெரிவித்திருந்தது. சோனி மீதான வழக்கு விசாரணையின் போது இதை அவர்கள் சொன்னதால், Dude-ஐ எதிர்த்து தனியாக வழக்கு தொடரும்படி நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.