News September 18, 2025
₹3.5 கோடி கடனில் இருக்கிறேன்: அண்ணாமலை

தனக்கு ₹3.5 கோடி கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொந்தமாக சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வாங்கிய விஷயத்தில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அண்ணாமலை, வேண்டுமென்றால் திமுக அரசு DVAC அனுப்பி சோதனை நடத்தட்டும் என்று சவால் விடுத்தார்.
Similar News
News September 18, 2025
இரவு தூங்குவதற்கு முன் இதை பாருங்க

ஒரே ஒரு நாள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை என்றாலும் கூட, அடுத்த நாளில் 60% வரை அதிகமாக எதிர்மறையான குணாதிசயங்களுடன் நடந்துகொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அரைகுறையான தூக்கம் மூளையின் செயல்பாடுகளை பாதித்து மன அழுத்தம், கோபம், பதற்றம், எரிச்சல், மன ஊசலாட்டங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதாம். இதை தடுக்க சரியான தூக்கம் அவசியம். எனவே, இரவு 10 மணிக்குள் தூங்க சென்றுவிடுங்கள்.
News September 18, 2025
‘கிஸ்’ நடிகையின் க்யூட்டான போட்டோஸ்

‘அயோத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரீத்தி அஸ்ரானி, அடுத்தடுத்து தமிழில் 2 படங்களில் நடித்துவிட்டார். இவர் நடித்துள்ள ‘கிஸ்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பிரீத்தி அஸ்ரானி செய்த ரீல்ஸ் வைரலாகி, பலரது மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். இவரது சமீபத்திய போட்டோக்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளன. இவர் எந்த ரீல்ஸ் மூலம் பிரபலமானார் என்று தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கருக்கு ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் வெள்ளித்திரைக்கான கதவை விசாலமாக திறந்தது. பின்னர் ‘மாரி’ படத்தில் இவர் நடித்த சனிக்கிழமை கதாபாத்திரம், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அன்னைக்கு காலைலே ஆறு மணி’ காமெடி காட்சிகள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட். அவரது நகைச்சுவை காட்சிகளை பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு பிடித்த காட்சி எது?