News April 6, 2025
ராமேஸ்வரம் வர ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி

ராம நவமி நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர், அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். நமது அனைத்து முயற்சிகளில் நம்மை வழிநடத்தும்; இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 18, புரட்டாசி 2 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
News September 18, 2025
₹3.28 லட்சம் விலை குறைத்த கார் நிறுவனம்

GST மறுசீரமைப்பு எதிரொலியாக பல்வேறு கார், பைக் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை குறைத்து வருகின்றன. அந்த வகையில், SKODA கார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. அதன்படி, Kodiaq மாடல் ₹3.28 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், Kylaq – ₹1.19, Slavia – ₹63,000, Kushaq – ₹61,000 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு வரு 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
News September 18, 2025
மாற்று என்றவர்கள் மறைந்து போனார்கள்: MK ஸ்டாலின்

திமுகவிற்கு மாற்று என்று இப்போதும் சிலர் பேசிக் கொண்டிருப்பதாக விஜய்யை, ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அவர், மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் மாறி போனதாகவும் மறைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இன்றும் மாறாத திமுக, தமிழக மக்கள் மனதிலிருந்து மறையவில்லை என்றும் கூறியுள்ளார். நம் கொள்கைதான் நமது பலம் என்ற அவர், இதுவே தமிழ்நாடு Politics என்றார்.