News December 6, 2024

கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு: வருந்தும் ஐஸ்வர்யா

image

தனிப்பட்ட பிரச்னை என்றாலும், தமிழ் சினிமாவில் விவாகரத்துகள் தொடர் கதையாகி விட்டன. இதனால் தனக்கு கல்யாணம் பண்ணவே பயமாக இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக வாழணும், நமக்கு இந்த விவாகரத்து எல்லாம் செட் ஆகாது என்கிறார் ஐஸ்வர்யா. ஒருவரை பார்த்தால் காதலித்து கல்யாணம் பண்ணணும்னு தோன்றும், அப்படிப்பட்ட ஒருவரை, தான் இன்னும் சந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.

Similar News

News November 4, 2025

தேர்வில் ஈஸியா PASS ஆக மாணவர்களுக்கு டிப்ஸ் PHOTOS

image

10, 12-வது வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் தேர்வுக்கு 3 மாதங்களே உள்ளன. ஆனால், எப்படி படிப்பது, எதை முதலில் படிப்பது, நேரத்தை எப்படி பயன்படுத்துவது போன்ற பல குழப்பங்கள் இருக்கலாம். இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க, ஈசியாக பாஸ் பண்ணிடலாம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து எல்லா டிப்ஸையும் பாருங்கள். அனைத்து மாணவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News November 4, 2025

FILES, PILES என பெயர் வைத்தால் விருது: பிரகாஷ்ராஜ்

image

மம்முட்டிக்கு கேரள அரசின் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய விருதில் அவருக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே தெரிகிறது, அது நடுநிலையுடன் வழங்கப்படுவதில்லை என்று விமர்சித்துள்ளார். இதை சொல்ல தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

News November 4, 2025

BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்

image

வேலூர், திருப்பூர் மாவட்ட திமுகவில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகள் அடங்கிய வேலூர் தெற்கு மாவட்டத்திற்கு AP நந்தகுமார் செயலாளராகவும், காட்பாடி, KV குப்பம் தொகுதிகளை கொண்ட வேலூர் வடக்கு மாவட்ட செயலாளராக கதிர் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர்(கி) மா.செ.,-வாக பத்மநாபன், திருப்பூர்(மே) மாவட்ட செயலாளராக கே.ஈஸ்வரசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!