News April 4, 2025
நான் ஒரு புலி… யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்

தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என சீமான் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட் கேட்பது எங்களுக்கு வேண்டாம். கூட்டணியில் எலியாய் இருப்பதைவிட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜித்து சாவது மேல். நான் சிங்கமும் இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: தேர்வு இப்போ இல்லை.. கலெக்டர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை., திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய 9 வட்டங்களில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.17-லும், ஜன.2 முதல் நேர்முக தேர்வும் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இலம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE
News November 27, 2025
BREAKING: தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ என பெயரிடப்படும். மேலும், புயலாக வலுப்பெற்ற பின் வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
LK 7: லாக் செய்த லோகேஷ்

‘கூலி’ பட தோல்விக்கு பிறகு, அருண் மாதேஸ்வரனின் ‘DC’ படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘LK 7′ என்ற ஹேஷ்டேக்குடன் அவரது உதவி இயக்குநர், இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இப்போட்டோ வைரலாகவே, ‘கைதி 2’ பட ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது வேறு படத்திற்கான இயக்குநர் குழுவாக கூட இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


