News April 6, 2025

பாம்பன் பாலத்தின் HYPERLAPSE வீடியோ!!

image

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இதனிடையே மண்டபம் ரயில் நிலையம் முதல் பாம்பன் ரயில் நிலையம் வரையிலான HYPERLAPSE வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

3 மாதங்களுக்கு ஸ்ரேயஸ் பேட்டை தொடக்கூடாதாம்

image

மண்ணீரல் காயம் காரணமாக இந்திய ODI துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இம்மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 21, 2025

நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

image

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.

error: Content is protected !!