News March 13, 2025
4 மணி நேரத்தில் காயத்தை குணமாக்கும் ஹைட்ரோஜெல்

மனித தோலுக்கு ஒத்த பண்புகளை கொண்ட செயற்கைத்தோலை ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரோ ஜெல் என அழைக்கப்படும் இந்த பொருள், உடலில் ஏற்படும் காயத்தை 4 மணி நேரத்தில் 90% அளவுக்கு குணப்படுத்திவிடுமாம். அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக காயம் ஆறிவிடுமாம். இந்த புதிய கண்டுபிடிப்பு செயற்கைத்தோல் தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.
Similar News
News March 13, 2025
இந்த ‘₹’ குறியீட்டின் கதை தெரியுமா..?

தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்திய ரூபாயின் குறியீட்டை திருச்சியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தான் வடிவமைத்தார். தேவநாகரி எழுத்து ‘र’ (ra) என்பதையும், நேர்கோடு இல்லாத ‘R’ ஆகியவற்றை சேர்த்து இது உருவாக்கப்பட்டது. தேவநாகரி சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010ல் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
News March 13, 2025
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசு: இபிஎஸ்

அவிநாசி தம்பதியினர் படுகொலையை சுட்டிக்காட்டி, ‘வருமுன் காப்பதும் இல்லை – பட்டும் திருந்துவதும் இல்லை’ என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு என சாடிய அவர், சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்துவிட முடியாது என்று ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
News March 13, 2025
தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி மறைவு

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், தொல்லியல் அறிஞருமான மா.சந்திரமூர்த்தி (80) உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாகையை சேர்ந்த இவர், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவ அடையாளங்களைக் கண்டறிந்துள்ளார். நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் காரணமாக மறைந்த நிலையில், போரூரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.