News March 26, 2025
மதுரை மண்ணில் ஹுசைனி உடல் அடக்கம்

புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹுசைனியின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், காஜிமார் தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.
News March 29, 2025
பழம்பெரும் பாடகி காலமானார்

அசாமை சேர்ந்த பழம்பெரும் பாடகி ஹீரா தாஸ் (73) காலமானார். பிரபல இசையமைப்பாளர் ஜே.பி.தாஸின் மனைவியான இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. அசாமிய மொழியில், காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த அவரது மரணத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 29, 2025
அன்று வங்கதேசம்; இன்று நேபாளம்?

நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடந்துவரும் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்றவில்லை என்பதால் மீண்டும் மன்னராட்சி வேண்டுமென்று எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருந்தன. இதிலும் அப்படி இருக்குமோ?