News April 12, 2024

மனைவி, 7 குழந்தைகளை கொன்ற கணவன்

image

பண நெருக்கடி காரணமாக மனைவி மற்றும் 7 குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் கோகர், போதிய வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், தனது மனைவி (கவுசர்), 8 முதல் 10 வயதுடைய 4 மகள்கள், 3 மகன்களை கோடரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News January 19, 2026

காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

News January 19, 2026

EPSக்கு அன்று ஏமாற்று வித்தை.. இன்று: மனோ தங்கராஜ்

image

அதிமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மனோ தங்கராஜ், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறியதற்கு, அதனை ஏமாற்று வித்தை என்று கூறிவிட்டு, நீங்கள் எதற்காக அறிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

News January 19, 2026

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்

image

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!