News March 17, 2025

மனைவியின் கிண்டலால் கணவன் தற்கொலை!

image

யார் கிண்டல் செய்தாலும் ஒரு ஆணால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியே கிண்டல் செய்தால்? கர்நாடகாவை சேர்ந்த பராசிவமூர்த்தி என்பவரின் வழுக்கை தலையை சுட்டிக்காட்டி, உங்களுடன் வெளியே வரவே வெட்கமாக இருக்கிறது எனக் கூறி வந்துள்ளார் மனைவி மம்தா. மேலும், வரதட்சணை வழக்கிலும் அவரை சிறையில் தள்ளியிருக்கிறார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த மூர்த்தி, மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News March 18, 2025

டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம், ₹1,000 கோடி டாஸ்மாக் ஊழல், போராட்டம் நடத்திய பாஜக கைது என பல்வேறு விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் அவர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

News March 18, 2025

தங்கம் விலை உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹66,000க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹8,250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி, கிராமுக்கு ₹113க்கு விற்கப்படுகிறது.

News March 18, 2025

ரஷ்யா, பிரான்ஸை ஓரங்கட்டிய இந்தியா!

image

2024ல் அதிக அதிகாரமிக்க நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. அதுவும் ரஷ்யா, பிரான்ஸ், UKவை ஓரங்கட்டி 0.30 புள்ளிகள் பெற்று முன்னேறி இருக்கிறது. எப்போதும் போல, 0.89 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 0.80 புள்ளிகளுடன் சீனா 2வது இடத்திலும் நீடிக்கின்றன. பொருளாதாரம், ராணுவம், முதலீட்டு மூலதனத்தை கொண்டு நாடுகளின் பலம் கணக்கிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!