News April 14, 2024

லாரன்ஸ் நடிப்பில் உருவாகிறது ‘ஹண்டர்’

image

விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வெங்கட் மோகன். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஹண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 10, 2025

மத்திய அரசு எடுக்கும் முடிவு.. உங்கள் வங்கி கணக்கு மாறலாம்

image

நாடு முழுவதும் உள்ள 6 சிறிய பொதுத்துறை வங்கிகளை, பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஒன்றிணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், சிறிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கு எண், IFSC கோடு, வங்கி கணக்கு புத்தகம், ATM கார்டு உள்ளிட்ட வங்கி விவரங்கள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்றிணைப்பு 2026-27 நிதியாண்டில் தொடங்கும் என கூறப்படுகிறது.

News December 10, 2025

பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த குடும்பம்!

image

கணவன், மனைவி பிரிவிற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பூண்டு மற்றும் வெங்காயத்தால் குஜராத்தில் ஒரு குடும்பம் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. மனைவி தீவிர வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பூண்டு, வெங்காயம் சாப்பிடக்கூடாது. ஆனால், கணவனும் அவரது தாயாரும், அதை பொருட்படுத்தாமல் உணவில் சேர்த்து சாப்பிட்டதால், தம்பதிக்குள் நாள்தோறும் சண்டை. கடைசியில் 11 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

News December 10, 2025

அதிமுகவின் குரலாக ஒலிக்கும் நயினார்: செங்கோட்டையன்

image

விஜய்யை விமர்சித்த <<18514254>>நயினார் நாகேந்திரனுக்கு<<>> தவெகவின் KAS பதிலடி கொடுத்துள்ளார். நயினார் பாஜகவிற்காக பேசாமல், அதிமுகவுக்காக பேசிக்கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இதற்கு நயினார் அதிமுகவில் இணைந்தால்கூட நன்றாக இருக்கும் எனவும் KAS சாடியுள்ளார். மத்திய பாஜகவை பற்றி மட்டுமே இதுவரை தவெக விமர்சித்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜகவையும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

error: Content is protected !!