News August 8, 2024
‘வேட்டையன்’ பட போஸ்டர் வைரல்

ஃபகத் ஃபாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ‘வேட்டையன்’ படக்குழு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஞானவேல் இயக்கத்தில், ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபகத் பிறந்தநாளில் படக்குழு சர்ப்ரைஸ் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
இராமநாதபுரம் தபால் சேவை குறைதீர் கூட்டம்

இராமநாதபுரத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற செப்.20ம் தேதி தபால் சேவை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. தபால் அனுப்பியதில் குறைப்பாடுகள் இருந்தாலும், இதற்கு முன்பாக நடைபெற்ற முகாமில் மனு கொடுத்திருந்து தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், உங்களது வேறு குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியுள்ளார்.
News September 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 19, 2025
மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் அஸ்வின்!

சிக்சர் மழை பொழியும் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவுள்ளார். IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் இந்திய அணியை அஸ்வின் வழிநடத்தவுள்ளார். அஸ்வின் விளையாடுவதால் இந்த தொடர் மேலும் பிரபலமடையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.