News March 21, 2025
உண்ணாவிரத போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். சேப்பாக்கம் எழிலகம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். 2021இல் அரசு ஊழியர்களுக்கு திமுக அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
Similar News
News March 21, 2025
சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

சின்ன வெங்காயம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மொத்த சந்தைக்கு வழக்கமாக வரும் 4,000 மூட்டைகளுக்கு பதிலாக இன்று 7,000 மூட்டைகள் வந்ததே இதற்கு காரணமாம். இதனால் விலை குறைந்து 1 கிலோ ₹15- ₹30க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ₹70 வரை விற்பனையானதாகவும், இந்த விலை குறைவு ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
News March 21, 2025
FactCheck : கோயில் அறங்காவலராக இஸ்லாமியரா?

தஞ்சை பெருமாள் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரை அறநிலைத்துறை நியமித்ததாக எச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில் பெருமாள் கோயில் அறங்காவலராக தேர்வான நர்க்கீஸ்கான் இஸ்லாமியர் இல்லை. மிகச் சிக்கலான பிரசவத்தில் பிறந்ததால், பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை, அவருக்கு பெற்றோர் வைத்துள்ளனர் என்று TNFactCheck தெரிவித்துள்ளது.
News March 21, 2025
10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.