News March 27, 2025
மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை!

டெல்லிக்கு முதல் முறையாக ரேபிடோ டிரைவரால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அந்நகரத்திற்கு துளியும் பரிச்சயம் இல்லாத இளம் பெண் வந்திறங்கி, ரேபிடோவில் பயணத்தை தொடங்கினார். போகும் வழியில் பெண்ணின் போன் பழுதானதை புரிந்த கொண்ட டிரைவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘நல்ல PG தேடி பிடிக்கலாம்மா. சவாரிக்கு காசு கூட வேண்டாம். நானும் பெண்ணை பெத்தவன்தாம்மா!’’ என கூற, அந்த நேரத்தில் தெய்வமாகவே மாறிபோனார்.
Similar News
News November 20, 2025
திருப்பத்தூர்: பிணையம் இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன்!

புதிய சிறு, குறு நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்கிறது மத்திய அரசின் CGTMSE திட்டம். இந்த CGTMSE திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகளை அணுகி, வணிக கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, பிணையமோ அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமோ இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News November 20, 2025
அரசன் படத்தில் சந்திரா கேரக்டரா?

சிம்புவின் அரசன் படத்திற்கு ஆடியன்ஸிடம் அதிபயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக வடசென்னை கேரக்டர்கள் யார் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், அரசன் படத்தில் சந்திரா கேரக்டர் இடம்பெறுமா என ஆண்ட்ரியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’இருக்கலாம்’ என பதிலளித்துள்ளார். இதனால் அரசனில் சந்திரா கேரக்டர் இடம்பெறும் என ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
News November 20, 2025
‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது பள்ளி HM, ஆசிரியர்கள் மனரீதியாக டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதிவைத்துள்ளார். Sorry அம்மா பலமுறை உங்களை காயப்படுத்தி இருக்கிறேன், கடைசி முறையாக இப்போதும் அதை செய்துள்ளேன்; எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிடுங்கள் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


