News March 17, 2024
அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி

தேர்தல் நெருங்கி விட்டதால், கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை மனிதநேய ஜனநாயக கட்சியினர் நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
Similar News
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் OTP கேட்டு நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனே 1930-க்கு புகார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 20, 2025
ஒரு செல்ஃபியில் பல லட்சம் கோடி!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஏற்பாடு செய்த விருந்தில், <<18338177>>ரொனால்டோ<<>> நேற்று கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக எலான் மஸ்க், OpenAI இணை நிறுவனர் கிரெக் புரோக்மேன், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. இந்த செல்ஃபியில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடியை தாண்டும்.
News November 20, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

கரூர் துயருக்கு பிறகு, மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4-ல் சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தொடங்கவுள்ள பரப்புரை விஜய்யின் அரசியலை தீவிரப்படுத்துமா?


