News December 3, 2024
5 ஓவரிலேயே அபார வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் Brian Bennett 21, Marumani 16 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து நடையை (20 ரன்களுக்கு 8 விக்கெட்) கட்டினர். இதனால் அந்த அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின் களமிறங்கிய PAK 5.3 ஓவரிலேயே 61 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Similar News
News August 23, 2025
விஜய் பாஜகவுக்கு எதிரி கிடையாது: நயினார்

பாஜக மக்கள் சேவை செய்யும் கட்சி, தங்களுக்கு யாரும் எதிரி இல்லை என நயினார் தெரிவித்துள்ளார். பாஜக தங்களது எதிரி என விஜய் கூறியதற்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். மீனவர்களுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை என விஜய் கூறியது குறித்து கேட்டதற்கு, கடந்த 2004 – 2014 முதல் மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 2014-க்கு பின் அதைப்போன்ற சம்பவம் நடைபெறவில்லை என்றார்.
News August 23, 2025
ஜனாதிபதியை சந்தித்த சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்தார். சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) சென்று திரும்பிய அவர், அண்மையில் PM மோடியை சந்தித்தார். இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராணனன் உள்ளிட்டோருடன் சென்று ஜனாதிபதியை சந்தித்து, தன் விண்வெளி பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது ககன்யான் உள்பட இந்திய விண்வெளி துறையின் எதிர்கால திட்டங்கள் வெற்றியடைய முர்மு வாழ்த்தினார்.
News August 23, 2025
வருகிறது FUTURE READY திட்டம்.. மாணவர்களுக்கு HAPPY NEWS

அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த FUTURE READY திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்கள் தொடர்பாக மாதந்தோறும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், தேர்வு நடத்தி மாணவர்களின் கல்வித் திறனை ஆசிரியர்கள் அறிய வேண்டும். இது மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். ரெடியா!