News April 2, 2024

அபார வெற்றி: புதிய கருத்துக் கணிப்பு

image

தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த முறை அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை அதுவும் கிடைக்காது என்று இந்தியா டுடே நாளேடு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்திருக்கும் பாஜகவுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 12, 2025

யாருக்கும் யாரும் அடிமை இல்லை: CM ஸ்டாலின் பதிலடி

image

அடிமைத்தனத்தை பற்றி EPS பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ள CM ஸ்டாலின், இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுடன் இருப்பது தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றார். DMK கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அடிமைபோல் செயல்படுவதாக EPS கூறியிருந்த நிலையில், கம்யூனிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை தான் புறக்கணித்ததில்லை என CM கூறியுள்ளார்.

News August 12, 2025

ஐசிசி விருதை தட்டித் தூக்கிய கில்(லி)..!

image

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது வழங்கி வருகிறது. ஜூலைக்கான விருதை இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் வென்று அசத்தியுள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 567 ரன்கள் குவித்திருந்தார். கேப்டனாக செயல்பட்டு இந்த விருதினை முதல் முறை வென்றது மிகவும் சிறப்பானது எனவும் இங்கிலாந்து தொடர் வாழ்வில் நிறைய கற்றுக் கொடுத்துள்ளதாகவும் கில் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை: EPS

image

மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என EPS கூறியுள்ளார். நேற்று திருப்பூரில் பேசிய ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி பரப்புரையில் பேசிய EPS, 2021 தேர்தலில் 10 தொகுதிகளிலும் வென்று கோவையில் ஆளுங்கட்சியாக அதிமுக உள்ளதை ஸ்டாலின் மறக்க வேண்டாம் என்றார். உங்கள் கருத்து?

error: Content is protected !!