News March 28, 2025
இயக்குநர் அவதாரம் எடுத்த ஹிர்த்திக் ரோஷன்

இந்திய சூப்பர் ஹீரோக்கள் படவரிசையில் ‘க்ரிஷ்’ படத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘க்ரிஷ் 3’ வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், க்ரிஷ் 4ல் நடிப்பதோடு அப்படத்தை இயக்கவும் ஹ்ரித்திக் ரோஷன் திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்த ஹிர்த்திக் ரோஷன் ரசிகர்கள் ‘க்ரிஷ் 4’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
Similar News
News March 31, 2025
NEP கல்வியை சீர்குலைக்கும்: சோனியா காட்டம்

கல்வியைத் தனியார் மயமாக்குவதே பாஜகவின் நோக்கம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கல்வித்துறை அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசு வசம் குவிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். கல்வி நிறுவனங்களை காவி மயமாக்குவதே பாஜகவின் நோக்கம் எனவும் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை கல்வித்துறை சீர்குலைக்கும் எனவும் எச்சரித்தார்.
News March 31, 2025
சம்மரில் கூலாக இருக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!

சிறிதளவு கருப்பு, வெள்ளை எள் விதைகளை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் நன்றாக மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். அதில், தண்ணீர், சிறிது பால், ஒரு சிட்டிகை உப்பு, வெல்லம் (அ) சர்க்கரை சேர்த்து கலக்கவும். வேண்டுமென்றால், 2 ஐஸ்ஸூம் சேர்க்கலாம். எள் விதைகள் உடல் சூட்டை குறைக்கும். மேலும், வயிற்று வலியைத் தடுக்கின்றன. இந்த ஜுஸ் மகாராஷ்டிரா, கோவாவில் மிக பிரபலம். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க!
News March 31, 2025
தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் மரணம்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அங்கு அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 2,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ரமலான் மாதம் என்பதால் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் மசூதியின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.