News April 24, 2025
இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (1/2)

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)
Similar News
News April 25, 2025
போப் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 317 ▶குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. ▶பொருள்: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
News April 25, 2025
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

பேஸ்பால் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், இந்திய மகளிர் பேஸ்பால் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.