News October 9, 2025
3 நாள்களில் PF பணத்தை எடுப்பது எப்படி?

இதற்கு PF கணக்குடன் பேங்க், ஆதார், PAN ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் ✦EPFO போர்ட்டலில், லாக்-இன் செய்து, ‘Online Services’ல் ‘Claim’ஐ கிளிக் செய்யவும் ✦வங்கி அக்கவுண்டை ‘Verify’ செய்து, என்ன வகை Withdrawal செய்ய வேண்டுமோ, அதை தேர்வு செய்யுங்கள் (PF Advance, Final Settlement) ✦Withdrawal-க்கான ஃபார்மை நிரப்பிய பின், வங்கி எண் போன்ற தகவல்களை சரிபார்த்து கொடுத்தால் போதும். SHARE IT.
Similar News
News October 9, 2025
நயனின் சினிமா வயது 22 ஆனது.. நெகிழ்ச்சி ❤️❤️

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை நயன்தாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். திரைப்படங்கள் தன் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு முதல்முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன எனவும், ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், தன்னை வடிவமைத்து உருவாக்கியதாகவும் அவர் பூரிப்படைந்துள்ளார். நயன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.
News October 9, 2025
காசா அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்: PM மோடி

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்ட நிலையில் PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்த ஒப்பந்தம் PM நெதன்யாகுவின் வலுவான தலைமைக்கு ஒரு பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
உலகின் துயரத்தை போக்கவே ராமாயணம்: மோகன் பகவத்

உலகின் துயரத்தை போக்கவே வால்மீகி ராமாயணத்தை படைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகி தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.