News April 17, 2025
EPF பணத்தை எடுப்பது எப்படி?

ஆன்லைன்: EPFO வலைதளத்திற்குள் [www.epfindia.gov.in](https://www.epfindia.gov.in) செல்லவும். UAN மெனுவில் “Claim” → “Request for Advance” க்குச் செல்லவும். காரணத்தைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பிக்கவும். நீங்கள், வங்கிக் கணக்கிற்கான Cheque Leaf-ஐ அப்லோட் செய்ய வேண்டியிருக்கலாம். ஆஃப்லைன்: உங்களுக்கு அருகிலுள்ள EPFO அலுவலகத்திற்குச் சென்று, படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும். 20 நாட்கள் வரை ஆகலாம்.
Similar News
News September 8, 2025
நேற்று வங்கதேசம்… இன்று நேபாளம்… நாளை?

இந்தியாவுக்கு ஆதரவான ஷேக் ஹசீனாவின் ஆட்சி ஓராண்டுக்கு முன் மாணவர் போராட்டங்களால் கவிழ்க்கப்பட்டது. இதில் வெளிநாட்டு சதி இருந்தது. தற்போது சோஷியல் மீடியா தடையை எதிர்த்து நேபாளத்தில் வெடித்துள்ள பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. இதிலும் வெளிநாட்டு தலையீடு இருக்கலாம். அண்டை நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ளது.
News September 8, 2025
சந்திர கிரகணம் முடிந்தது.. இனி இதை செய்யுங்க

சந்திர கிரகணம் இன்று அதிகாலையில் முடிந்துவிட்டது. எனவே, இதுவரை செய்யவில்லை என்றாலும், இனியாவது வீடு மற்றும் சாமி படங்களைச் சுத்தம் செய்து, இறைவனை வழிபாடு செய்யுங்க. குறிப்பாக, சாமி படங்களுக்கு முன் விளக்கேற்றி வழிபாடு செய்தால், வீட்டிற்கு செல்வம் தேடி வரும். அதுமட்டுமல்லாமல், கிரகண தோஷமுள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நாளை காலைக்குள் பரிகாரங்களை செய்யலாம்.
News September 8, 2025
அம்மாடியோவ்.. ₹20 கோடி வாட்ச் அணிந்த பாண்ட்யா!

ஆடம்பரமான பொருள்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது டிரெண்டிங் செய்தியில் இடம்பெறுபவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ஆசியக் கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் அணிந்துள்ள வாட்ச்சின் விலை ₹20 கோடியாம். இந்த வகை Richard Mille RM 27-04 model வாட்ச், உலகிலேயே 50 மட்டுமே உள்ளது. ஆசியக் கோப்பை பரிசுத் தொகையை விட (₹2.6 கோடி) இதன் மதிப்பு சுமார் 10 மடங்கு அதிகம்.