News September 9, 2025
ஆசிய கோப்பை போட்டிகளை எப்படி பார்ப்பது?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. போட்டியை எப்படி பார்ப்பது என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை சோனி குழுமம்தான் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகும். மேலும், சோனி லைவ் ஆப், இணையதளத்திலும் பார்க்கலாம். சப்ஸ்கிரிப்ஷன் செய்வது அவசியம். SHARE IT.
Similar News
News September 10, 2025
இந்தியா ஒரு ரத்த காட்டேரி: டிரம்பின் ஆலோசகர்

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் USA-ன் ரத்தத்தை உறிஞ்சும் ரத்த காட்டேரிகளாக இருப்பதாக டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்துள்ளார். வரலாற்று ரீதியாகவே ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்க்கும் பிரிக்ஸ் நாடுகள், எவ்வளவு நாள் ஒற்றுமையாக இருக்கும் என்பதை பார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா உடன் வர்த்தகத்தில் ஈடுபடாவிட்டால் அந்நாடுகள் பிழைப்பதே கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
₹200 கோடி.. வசூலில் கெத்து காட்டும் ‘லோகா’

இந்தியாவின் முதல் Super Women படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உலகம் முழுவதும் ₹200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ₹30 கோடி செலவில் இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து இருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் கதை நாயகியாக நடிக்க, டொமினிக் அருண் இப்படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் உருவாகி, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது.
News September 10, 2025
ஆசிய கோப்பை: இந்திய அணியின் PLAYING XI இதுவா?

ஆசிய கோப்பையில் UAE அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் நாளை(செப்.10) இந்திய அணி களமிறங்குகிறது. Times of India தகவலின்படி, இந்திய அணியின் PLAYING XI-ல், கில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(C), அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(WK), பும்ரா, வருண், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவர் எனக் கூறப்படுகிறது. இந்த அணி எப்படி இருக்கிறது?