News August 19, 2025
ChatGPT Go பயன்படுத்துவது எப்படி?

<<17454443>>குறைந்த கட்டண<<>> ChatGPT Go சேவையை பயன்படுத்த பின்வரும் ஸ்டெப்ஸை பின்பற்றவும்: *இணைய அல்லது மொபைல் பிரவுசரில் ChatGPT ஓபன் செய்யவும். *அதன்பின் உங்கள் இ-மெயில் ஐடி கொண்டு ஒரு லாக்-இன் செய்யவும். *பின் பேனரில் உள்ள Upgrade என்ற ஆப்ஷனுக்கு செல்லவும். *அதில் ‘Try Go’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். *ChatGPT-க்கு UPI மூலம் கட்டணம் செலுத்தி, உங்கள் அக்கவுன்ட் மூலம் ChatGPT பயன்படுத்த தொடங்குங்கள்.
Similar News
News January 14, 2026
சற்றுமுன்: ₹5,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

பொங்கல் பரிசாக பல்வேறு அறிவிப்புகளை <<18854282>>தமிழக அரசு<<>> அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றும் பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு (RCH) வழங்கப்பட்டு வரும் ₹1,500 மாத சம்பளம் ₹5,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை ஜன.19-ல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
பெயர்களை நீக்கவும் அதிகாரம் உள்ளது: ECI

SIR-ஐ எதிர்த்து SC-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஒருநபரின் குடியுரிமையை தீர்மானிக்கும் வரை, அவரது வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியுமா என்று SC, கேள்வி எழுப்பியது. இதற்கு ECI, சந்தேகத்திற்குரிய சந்தர்ப்பத்தில் குடியுரிமை குறித்து விசாரிக்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கவும் தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று பதிலளித்துள்ளது.
News January 14, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை தற்போது தகுதியான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பதை அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, அரசு & தனியார் நிறுவனங்களில் ஊதியம் பெறுபவராக இருக்கக்கூடாது. எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரி மாணவிகளாக இருக்கக்கூடாது. உரிமைத்தொகை பெறுவோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.


