News May 16, 2024
சிலிண்டரை பரிசோதிப்பது எப்படி?

உதாரணமாக, சிலிண்டரில் A2024 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A-என்பது ஜனவரி-மார்ச்,B-ஏப்ரல்-ஜூன், C-ஜூலை-செப்டம்பர், D-அக்டோபர்- டிசம்பர் குறிக்கக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். இதன்மூலம் சிலிண்டர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். பரிசோதிக்கப்பட்ட பின் அடுத்த சோதனைக்கான தேதி சிலிண்டரில் ஒட்டப்படும்.
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) சென்னைக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் சென்னையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
DKS-ஐ மறைமுகமாக தாக்கிய சித்தராமையா

தன்னை CM ஆக்க <<18401800>>காங்., வாக்கு கொடுத்தது<<>> என்பதுபோல பதிவிட்டு பிறகு அதை நீக்கியிருந்தார் டி.கே.சிவக்குமார். இந்நிலையில், கர்நாடகா மக்கள் கொடுத்த பொறுப்பு 5 ஆண்டுகளுக்கானது எனவும், காங்.,ம் தானும் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி வருவதாகவும் சித்தராமையா X-ல் பதிவிட்டிருக்கிறார். மேலும், கர்நாடகாவுக்கு காங்., கொடுத்தது வெறும் வாக்கு அல்ல, அது இந்த உலகத்தை விட பெரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.


