News August 24, 2024
ட்ரேடிங் A/C தொடங்குவது எப்படி?

Zerodha, Groww, Angel One போன்ற Discount ப்ரோக்கர்கள் மூலமும், ICICI Direct, HDFC Sec, SBI Caps போன்ற Fulltime ப்ரோக்கர்கள் மூலமும் ட்ரேடிங் A/C தொடங்க முடியும். இதில் Discount ப்ரோக்கர் செயலிகளில் சேவைகள் அதிகமாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். ஆதார் அட்டை, PAN கார்டு, வங்கி A/C இருந்தால் ஆன்லைனில் எளிதாக கணக்கு தொடங்க முடியும். ட்ரேடிங் A/C உடன் சேர்த்து Demat A/C கணக்கும் உருவாக்கப்படும். <<-se>>#Sharemarket<<>>
Similar News
News March 8, 2026
டி20 WC நிறைவு விழாவில் சர்வதேச பாப் பாடகர்!

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானம் டி20 WC பைனலுக்கு தயார் நிலையில் உள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி 2 முறை கிராமி விருது வென்ற சர்வதேச பாப் நட்சத்திரம் ரிக்கி மார்ட்டினின் கச்சேரி நடைபெற உள்ளது. அவருடன் இந்தியாவின் பாப் பாடகர் சுக்பீர் மற்றும் புகழ்பெற்ற பாடகி ஃபால்குனி பதக்கும் இசையால் அரங்கில் தீ பற்ற வைக்க உள்ளனர்.
News March 8, 2026
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?

ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் வாழ்த்துகள் பறந்தாலும், அதன் பின்னால் உள்ள வலி, வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. 1908-ல் வாக்குரிமை, சம பணிநேரம் & சம ஊதியம் கேட்டு நியூயார்க்கில் பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். 1910-ல் ஜெர்மனியை சேர்ந்த கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் பேரில், 1917-ல் ரஷ்ய பெண்கள் மார்ச் 8-ம் தேதி நடத்திய Peace and Bread போராட்டமே, பின்னாளில் உலக மகளிர் தினம் உருவாக காரணமானது.
News March 8, 2026
மார்ச் 8: வரலாற்றில் இன்று

*1908 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். *1911 – சர்வதேச மகளிர் தினத்திற்கான தீர்மானம் முதல்முதலாக நிறைவேறியது. *1989 – இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிறந்த தினம். *1934- தமிழ் எழுத்தாளர் ML தங்கப்பா பிறந்த தினம். *1972- பாலிவுட் நடிகர் தருண் போஸ் நினைவு தினம்.


