News April 11, 2025

இடி, மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

image

மழைக்காலங்களில் இடி, மின்னல் ஏற்படும்போது வீட்டிற்குள் இருப்பதே பாதுகாப்பானது. அருகில் கட்டடம் ஏதும் இல்லாவிட்டால், கார், வேன் அல்லது பஸ்ஸூக்குள் சென்றுவிட வேண்டும். வெட்டவெளியில் நிற்கக்கூடாது. இடி, மின்னல் ஓய்ந்து அரை மணி நேரம் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அருகிலும் செல்லக் கூடாது. எக்காரணம் கொண்டும் மரத்தடியில் தஞ்சமடையக்கூடாது. SHARE IT!

Similar News

News April 18, 2025

ஊருக்கு கிளம்பி விட்டாரா SRH கேப்டன்?

image

நடப்பு IPL சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH அணி, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸின் மனைவி பெக்கி கம்மின்ஸ் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதில், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவது போன்ற போட்டோக்கள் இருக்கின்றன. அதில், ‘Goodbye India’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 18, 2025

3 நாட்களில் ரூ.18.42 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்

image

மும்பை பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, நேற்று மட்டும் ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வை சந்தித்தன. இந்த 3 நாள் உயர்வால், மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு ரூ.18.42 லட்சம் கோடி கிடைத்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தையின் முதலீடு மதிப்பு ரூ.419.60 லட்சம் கோடியாக அதிகரித்தது.

News April 18, 2025

காேயில் பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசம்

image

தற்போது தமிழகம் முழுவதும் நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி தர வேண்டுமென அண்மையில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பஸ்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.

error: Content is protected !!