News October 20, 2025

பட்டாசு வெடிக்கும்போது கண்களை காப்பது எப்படி?

image

*பட்டாசு துகள் பட்டால் உடனே கண்களை தேய்க்கக் கூடாது. குளிர்ந்த நீரால் கண்களை கழுவுங்கள். இதனால் கண்ணுக்குள் விழுந்த மத்தாப்பு துகள், பட்டாசு துகள்கள் வெளியேறிவிடும். *பாதுகாப்புக்காக கண்ணாடி அணிந்து பட்டாசு வெடிக்கலாம். *குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளியில் நின்றபடி வெடிக்கலாம். *வெடிகளை கையில் கொளுத்தி விளையாடுவதை தவிர்த்தால், கண்களை காக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News March 25, 2026

இன்று பிரசாரத்தை தொடங்கும் EPS

image

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை EPS மயிலாப்பூரில் தொடங்குகிறார். அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்காக ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். சென்னையைத் தொடர்ந்து நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

News March 25, 2026

BREAKING: திமுக கூட்டணி.. ஒரே இரவில் மாறியது

image

கூட்டணியில் பிரதான கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது. நேற்று இரவு இறுதியாக தேமுதிகவுடனான பங்கீடு முடிந்தது. தற்போது திமுக வசம் 168 இடங்கள் உள்ளன. மதிமுக – 3, மமக & கொமதேக ஆகியவை தலா 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இனி கூட்டணியில் சேரும் கட்சிகளும் திமுக சின்னத்தில் போட்டியிடவே வாய்ப்புள்ளது. எனவே, இம்முறை உதயசூரியன் சின்னம் 175 இடங்களில் களமிறங்கவுள்ளது.

News March 25, 2026

தொகுதி ஒதுக்கீடு.. மதிமுக மா.செ. ஆதங்கம்

image

​தி​முக கூட்​ட​ணி​யில் மதி​முக​வுக்கு பிற கட்​சிகளை விட குறை​வான தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்ளதாக மதி​முக மா.செ. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் மணவை தமிழ்​மாணிக்​கம், இதற்​காக நாங்​கள் தேர்​தல் பணி​யில் பின்​தங்க மாட்​டோம். கட்​சித் தலை​மை​யின் உத்​தர​வுக்கு கட்​டுப்​பட்​டு, தோழமைக் கட்​சி​களின் வெற்​றிக்கு பாடு​படு​வோம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!