News September 13, 2025
குறட்டை வராமல் தடுப்பது எப்படி?

தூங்கும்போது நமது நாக்கு தொண்டை பகுதியில் சிக்கிக் கொள்வதால் குறட்டை வருவதாக கூறப்படுகிறது. அதனை தவிர்க்க வழிகள் உள்ளன. தலையை சற்று உயர்த்தி படுக்க 2 தலையணை பயன்படுத்துங்கள். மது, சிகரெட் பழக்கமுள்ளவர்கள் அதனை குறையுங்கள். உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நேராக படுக்காமல், இடது (அ) வலது புறம் திரும்பி படுங்கள். குறட்டை விடும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 14, 2025
இளையராஜாவின் ரத்தத்தில் இசை ஊறியுள்ளது: ரஜினி

இளையராஜா என்ற எளிய மனிதனுக்கு பிரமாண்ட விழாவை தமிழக அரசு நடத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார். தன் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா என தெரிவித்த அவர், இளையராஜாவின் நாடி, நரம்பு, ரத்தத்தில் இசை ஊறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பல சோகங்களை வாழ்வில் கண்ட இளையராஜா, SPB மறைவுக்கு சிந்திய கண்ணீரை யாருக்கும் சிந்தவில்லை என ரஜினி தெரிவித்தார்.
News September 14, 2025
விஜய் விமர்சனத்திற்கு அன்பில் மகேஷ் பதிலடி

2 அமைச்சர்கள் (நேரு, அன்பில்) இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை என்ற விஜய்யின் விமர்சனத்திற்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமை, புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்றவற்றில் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம் என தெரிவித்தார்.
News September 13, 2025
பெட்ரூமில் இதை செய்யாதீங்க!

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.