News July 10, 2024
வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி?

வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. ஓடிபி மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும், குறுந்தகவல், லிங்குகளை நம்பி டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. பணத்தை திருடும் முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrim.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 4, 2025
சாதனைக்கு மத்தியிலும் சோகத்தில் தவிக்கும் TN சினிமா

மக்களை கவனிக்க வைக்கும் படங்கள் குறைந்து வருவதால், தமிழ் சினிமா சரிவை நோக்கி நகர்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தமிழில் 32 திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளதாம். ஆனால், இதில் சோகம் என்னவென்றால் படங்கள் எதுவும் வசூலில் சாதனையை படைக்கவில்லை. இந்த ஆண்டு இதுவரை வெளியான 262 படங்களில் 28 மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளன. மொத்த எண்ணிக்கையில் இது 11% மட்டுமே என்பது பெரும் சோகம்.
News December 4, 2025
PM மோடியை அடிபணிய வைக்க முடியாது: புடின்

வரி விதிப்பின் மூலம் US, இந்தியாவை அச்சுறுத்துகிறதா என ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்கப்பட்டது. அதற்கு, PM மோடியை அழுத்தத்தால் அடிபணிய வைக்க முடியாது என அவர் பதிலளித்தார். அதேபோல், தற்போதைய இந்திய பயணத்தின் போது AI துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். மேலும், சீனாவில் SCO மாநாட்டில் எனது காரில் PM மோடியை அழைத்து சென்றது, எங்கள் நட்பின் அடையாளம் என்றும் கூறியுள்ளார்.
News December 4, 2025
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கு புறப்பட்டு காத்திருக்கும்போது, பஸ் கூட்டமாக வருவதால், மாணவர்கள் காலையிலேயே சற்று சோர்வடைகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் கட்டணமில்லா பஸ் சேவைகள் சென்னையில் அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக கட்டணமில்லா பஸ் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.


