News January 9, 2025

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

image

விஷ்ணுவின் மகிமையை பெற ஏகாதசி விரதம் சிறப்பானது. முந்தைய நாள் இரவு கண் விழித்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாட வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலை நீராடி, கோயிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பிற்கு சென்று வழிபட வேண்டும். விரதத்தின் போது சாப்பாடு மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பழங்கள், பால், தயிர், நிலக்கடலை, பயித்தம் பருப்பு பாயசம் செய்து விஷ்ணுவிற்கு படைக்க வேண்டும்.

Similar News

News January 16, 2026

கம்பேக் கொடுத்தாரா ஜீவா? முந்தும் TTT

image

பொங்கல் ரேஸில் ஜீவாவின் ‘TTT’ முந்துவதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இந்த படத்தின் கதைக்களம், நடிகர்களின் ஆக்டிங், காமெடி, குறைவான ரன் டைம் என அனைத்தும் பிளஸ்ஸாக அமைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் புக்கிங் தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும் நிலையில், ஜீவாவிற்கு இது சரியான கம்பேக் படம் எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். நீங்க பாத்தாச்சா TTT.. எப்படி இருக்கு?

News January 16, 2026

BREAKING: தவெகவில் புதிய குழுவை அமைத்தார் விஜய்

image

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அந்தக் குழுவில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது 234 தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை திட்டமிடவுள்ளது.

News January 16, 2026

SLUM DOG.. 33 TEMPLE ROAD-ல் விஜய் சேதுபதி!

image

மசாலா படங்கள் இயக்குவதில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘Slum dog, 33 Temple Road’ என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ரத்தம் சொட்டும் கத்தியை பிடித்த கையோடு முறைத்தபடி நிற்கிறார். பான் இந்திய படமாக உருவாகும் இந்த படத்தில் சம்யுக்தா மேனன், தபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

error: Content is protected !!