News April 25, 2024
சந்தன பானகம் செய்வது எப்படி?

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைப் போக்க சந்தன பானகத்தைப் பருகலாமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. சந்தன பானகத்தை செய்வது எப்படி என பார்க்கலாம். முதல் நாள் இரவு மண்பானைத் தண்ணீரில் ஊறவைத்த செஞ்சந்தனத்துடன் பனை வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்தால் பானகம் ரெடி. இப்பானகத்தைக் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் நீங்குமாம்.
Similar News
News January 27, 2026
நாளை முதல் தவெக தேர்தல் பிரசாரம்: விஜய்

‘ஜன நாயகன்’ பட பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், 2026 தேர்தலுக்கான அறிவிப்புகளை விஜய் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஏற்கனெவே அறிவித்தபடி நாளை முதல் தவெக தேர்தல் பிரசாரம் திட்டமிட்டப்படி தொடங்கும் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை YMCA மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் பிரசார கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
விஜய் CM ஆவதில் என்ன தவறு? பாமக MLA அருள்

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக விஜய் வருவதில் தவறில்லை என பாமக MLA அருள் கூறியுள்ளார். இளைஞர்கள் பலத்தை கொண்டுள்ள விஜய் ஏன் முதல்வராக வர கூடாது என்று கேள்வி எழுப்பிய அவர், அவரை குறைத்து எடை போடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். <<18971399>>ராமதாஸ்<<>>, தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், அவரது தரப்பு MLA இவ்வாறு கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News January 27, 2026
பிரபல நடிகர் காலமானார்!

பிரபல நடிகர் அலெக்சிஸ் ஒர்டேகா(38) திடீரென மரணமடைந்துள்ளார். The House of Flowers, El Candidato போன்ற சீரிஸ்களில் நடித்துள்ள இவர், சிறந்த டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். Spider-Man: Homecoming, Avengers: Infinity War போன்ற படங்களில் ஸ்பைடர் மேனுக்கு ஸ்பேனிஷ் மொழியில் இவர்தான் டப்பிங் கொடுத்துள்ளார். இவரது திடீர் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


