News March 20, 2024
செம்பருத்திப்பூ சர்பத் செய்வது எப்படி?

இதய படபடப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது செம்பருத்திப்பூ. எளிதாக கிடைக்கும் செம்பருத்திப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்திப்பூ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News October 18, 2025
உலகின் டாப் 5 விலையுயர்ந்த மதுபானங்கள்

ஒவ்வொரு பொருளும், அதன் விலைக்கேற்றார் போலான தரத்தில் இருக்கும். அதுபோல் தான் மதுவும். மதுவை ரசித்து ருசித்து சுவைப்போர் என்றால் வெகு சிலரே. இந்நிலையில், உலகிலேயே சுவைமிக்க, அதேசமயம் அதிக விலையுடைய மது வகைகளை மேலே swipe செய்து பாருங்கள். இருப்பினும், மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
News October 18, 2025
தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 18, 2025
தங்கம் முதலீடு அல்ல, காப்பீடு: ஸ்ரீதர் வேம்பு

தங்கம் வாங்குவது முதலீடு அல்ல, அது தான் ஒருவரின் Insurance என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையின் நிலையற்றத்தன்மையால், வேகமாக ஏறும் மதிப்புகள் திடீரென முழுவதுமாக சரிய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 2008 நிதி நெருக்கடி போல மீண்டும் வரலாம் என்று எச்சரித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நிதி அபாயத்தில் இருந்து காக்கும் காப்பீடு தங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.