News August 25, 2024
மீன் பஜ்ஜி செய்வது எப்படி?

முள் நீக்கிய மீன் துண்டுகளை மஞ்சள் போட்டு சுத்தமாக அலசி, நீர் வடிய நன்றாக பிழிந்துகொள்ளவும். அவற்றின் மீது மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்த மசாலா விழுதை தடவி, ஊற வைக்கவும். கெட்டியான பதத்தில் உள்ள அதனை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான மீன் பஜ்ஜி ரெடி. இதனை மல்லி சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
Similar News
News January 7, 2026
NDA-வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? அன்புமணி விளக்கம்

மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காகவே அதிமுகவுடன் கைகோர்த்துள்ளதாக அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். 100 நாள்களாக சுற்றுப்பயணம் செய்து பாமக தொண்டர்களிடம் கருத்து கேட்டு இந்த கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக கூறிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறும் என சூளுரைத்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 7, 2026
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. அரசு புதிதாக அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் <
News January 7, 2026
மிகவும் கவலையாக உள்ளது: ஜெய்சங்கர்

<<18775826>>அதிபர் மதுரோ<<>> கைதுக்கு பின்னர், வெனிசுலாவில் நிலவி வரும் சூழல் கவலையை ஏற்படுத்துவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அங்கு நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து பேசி, வெனிசுலா மக்களின் நலனிற்காக சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


