News April 7, 2024
சங்குப்பூ சர்பத் செய்வது எப்படி?

இதய படபடப்பு, சிறுநீரகப்பாதை தொற்று போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது சங்குப்பூ. எளிதாக கிடைக்கும் சங்குப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி துண்டுகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் சங்குப்பூ (ஊற வைத்தது) நீரை ஊற்றி, தேன் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News January 15, 2026
EPS-யிடம் பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிய பாஜக

தேமுதிக மற்றும் பல சிறிய கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்கும் பொறுப்பை EPS-யிடம் பாஜக கொடுத்து ஒதுங்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கட்சிகளின் தலைவர்கள் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து அதிக தொகுதிகளை கேட்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சிறிய கட்சிகளின் பலம், தலைவர்களின் நெளிவு, சுளிவுகள் EPS-க்கு நன்றாக தெரியும் என்பதாலும் அவரிடம் முழுப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
News January 15, 2026
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல், வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள், மனதினிலே தீரட்டும் சங்கடங்கள்.. இனிய பொங்கல் வாழ்த்துகள் *மங்களம் பொங்கட்டும், மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும், எண்ணியது ஈடேற.. தைப்பொங்கல் வாழ்த்துகள் *தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்கட்டும்.
News January 15, 2026
ELECTION: 200 தொகுதிகளில் திமுக போட்டி?

தவெகவை கைகாட்டி ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்டு வருகிறது. ஆனால், பங்கு கொடுக்க முடியாது என பிடிவாதத்தில் இருக்கும் திமுக, கூட்டணியில் இருந்து காங்., வெளியேறினால், அதற்கு மாற்று வியூகத்தை வகுத்துள்ளதாம். தங்களுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக ஆலோசிக்க வரும் 20-ம் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாம்.


