News February 15, 2025
ஆதார் மிஸ்யூஸ் ஆகாமல் தடுக்க… லாக் செய்வது எப்படி?

ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சிம்பிளாக லாக் செய்துவிடலாம் * myaadhaar.uidai.gov.in போர்ட்டலுக்கு செல்லுங்கள் *ஆதார் லாக்/அன்-லாக்கை கிளிக் செய்யவும் *பயோமெட்ரிக்ஸை UID லாக்/அன்-லாக் ஆப்ஷனை கிளிக் செய்யவும் *அதில், லாக் ஆதார் என்பதைக் கிளிக் செய்க *உங்கள் ஐடி, பெயர், எண், கேப்ட்சா, OTP ஐ உள்ளிடவும் *ஒப்புதல் பெட்டியைக் கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். உங்கள் ஆதார் லாக் ஆகிவிடும்.
Similar News
News September 19, 2025
EPFO சேவைகள் இனி ஈஸி

பிஎப் (EPFO) இணையதளத்தில் சேவைகளை பெற லாக்-இன் செய்யும்போது, பாஸ்புக் விவரங்களை பார்க்க தனியே லாக்-இன் செய்ய வேண்டியிருந்தது. இனி அந்த சிரமம் இருக்காது. இனி உறுப்பினர் பக்கத்துக்கு லாக்-இன் செய்வதிலேயே பாஸ்புக் விவரங்களையும் பார்க்க முடியும். தனியே லாக்-இன் செய்யும் தேவை இருக்காது. மேலும், PF டிரான்ஸ்பர் சான்றிதழையும் பிடிஎப் வடிவில் இந்த தளத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
News September 19, 2025
13 பந்துகளில் அரைசதம்.. அதிரடி காட்டிய வீரர்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை நமீபியா வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20-ல், வெறும் 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விரட்டி 77 ரன்கள் எடுத்தார். நமீபியா 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்த நிலையில், சேஸ் செய்த ஜிம்பாப்வே 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
News September 19, 2025
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

ஈரான் மீதான பொருளாதாரத் தடையில், அந்நாட்டின் சாபஹார் துறைமுகத்துக்கு அளித்துவந்த விலக்கை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும். ஐரோப்பா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகத் தொடர்புக்காக சாபஹார் துறைமுகத்தை பெரும் பொருள் செலவில் இந்தியா மேம்படுத்தியது. அமெரிக்காவின் தடையால், இவ்வழியாக இந்தியாவின் வணிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.