News April 21, 2025
₹21,000 மாத சம்பளத்தில் வாழ்வது எப்படி?

பெங்களூரு போன்ற மாநகரத்தில் ₹21,000 சம்பளத்தில் வாழ்வது குறித்து Reddit-ல் ஒருவர் போட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது. சாப்பாடு ₹8,000, வீட்டு வாடகை ₹9,000, போக்குவரத்து ₹2,000, இதர செலவுகள் ₹2,000 என செலவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். மது, சிகரெட் பழக்கம் இல்லை எனவும், 20 வயதில் வாழ்க்கையை என்ஜாய் பண்ண நினைப்பவர்கள் இதை ஃபாலோ பண்ண வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
Similar News
News August 14, 2025
உயராத தங்கம் விலை

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,320-க்கும், கிராமுக்கு ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், இன்று உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News August 14, 2025
இரவில் கைது.. கொந்தளித்த விஜய்

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில், திமுக அரசு இரவோடு இரவாகக் கைது செய்துள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையை மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு என சாடிய அவர், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News August 14, 2025
இனி 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. CTS முறையில் பணமாக்கும் செயல்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில், அக்.4 முதல் 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்ற RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing மற்றும் Settlement on Realisation முறையில் இந்த செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். இதனால் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சிரமத்தை தவிர்க்க முடியும்.