News April 12, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என எப்படி அறிவது?

வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 18 வயதான அனைவரும் வாக்களிக்க முடியும். ஆதலால் தேர்தல் ஆணைய இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு, தங்களது பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம். செல் எண், பிறந்த தேதியை உள்ளிட்டும் அறிந்து கொள்ள முடியும். பெயர் இருப்பது உறுதியானால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
Similar News
News July 6, 2025
கழிவறையில் இந்த தவறுகளை செய்யாதீங்க..

செல்போனை கழிவறைக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கு உள்ளது. அப்படி எடுத்துச் சென்றால், அதனை அங்குள்ள பலகையில் வைக்கும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொண்டு, அதன் மூலம், பல நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வெஸ்டர்ன் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும் போது, அதிலிருந்து வெளிவரும் சிறுநீர் துளிகள் வெளியே பட்டு, அதன் காரணமாக பல்வேறு நோய்த்தொற்றுக்கள் வரும் வாய்ப்புள்ளது. Be Safe..!
News July 6, 2025
உலக சாதனை படைத்த Vice Captain ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டில் மாபெரும் ரெக்கார்ட் ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் ஃபார்மெட்டில், வெளிநாட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்(24 சிக்சர்கள் – ENG) என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ்(21 சிக்சர்கள் – SA), மேத்யூ ஹைடன் (19 -IND), ஹேரி ப்ரூக் (16- NZ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
News July 6, 2025
சிக்கன் விலை உயர்வு

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால் தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை இன்று ₹5 முதல் ₹10 வரை அதிகரித்துள்ளது.