News June 30, 2024
தொலைந்த ரேஷன் அட்டைக்கு மாற்று அட்டை பெறும் வழி (1/2)

ரேஷனில் பொருள்கள் பெற அளிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்மார்ட் அட்டை தொலைந்து போனாலோ, திருடு போனாலோ, உடைந்து போனாலோ, மாற்று அட்டை பெற தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பித்தோ, ஆன்லைனில் விண்ணப்பித்தோ புதிய ரேஷன் அட்டையை பெறலாம்.
Similar News
News September 20, 2025
சற்றுநேரத்தில் விஜய் கட்சியில் இணைகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அடுத்து எந்த கட்சியில் இணையபோகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாகையில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய் முன்னிலையில், தவெகவில் அவர் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவர் தவெகவில் இணைந்தால், 2026 தேர்தலில் நாகையில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News September 20, 2025
டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? ஆனால் 1 மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் ➤பதற்றம் குறையும் ➤டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் ➤செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் ➤செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.
News September 20, 2025
ரோபோ சங்கர் கடைசியாக பேசிய வார்த்தை.. கண்ணீர்

மறைவதற்கு முன்பு ரோபோ சங்கர் கடைசியாக பேசியது குறித்து அவரது அண்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார். எப்போது கேட்டாலும் தூக்கம் வரலைனுதான் சொல்வான். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றாலும் 4 மணிக்கு எந்திரிச்சு, தூக்கமே வரலைனு TV-ய போட்டு உட்காருவான். ஆனால், அன்று ( ஹாஸ்பிடலில் சேர்த்தநாள்) கடைசியா எனக்கு தூக்கம் வருது; நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என சொன்னான்; அதன்பின் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.