News April 14, 2024
பகுதி நேர வேலை பார்ப்போர் எப்படி தனிநபர் கடன் பெறுவது?

பகுதி நேர வேலை பார்ப்போர், பின்வரும் 2 ஆலோசனைகளை கடைபிடித்தால், முழுநேர வேலை பார்ப்போர் போல தனிநபர் கடனை எளிதில் பெற முடியும். *கிரெட்டிட் ஸ்கோர் 750 புள்ளிகளுக்கும் அதிகமாக இருக்கும்படி பார்த்து கொண்டால், தனிநபர் கடன் வழங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்வரும் *வருமானம் ஈட்டக்கூடிய குடும்ப உறுப்பினர் ஒருவரை கூட்டு சேர்த்து விண்ணப்பித்தால் தனிநபர் கடன் கிடைக்கும்.
Similar News
News January 8, 2026
ஜனநாயகன் வழக்கில் நாளை தீர்ப்பு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னரே தணிக்கைக்குழு படத்தை பார்த்து சென்சார் வழங்கும். அதன்பின், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. சென்சார் விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளதால், ஜனநாயகன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
News January 8, 2026
பொங்கல் பரிசு பணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் வைத்து பொங்கல் பரிசுத்தொகை ₹3000-ஐ பெற முடியும். இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், வெளியூரில் இருப்பவர்களுக்கு ₹3000 கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வெளியூரில் இருப்பவர்கள் தாமதமாக வந்தாலும், பொங்கல் பரிசுத் தொகையை எவ்வித இடையூறுமின்றி பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
News January 8, 2026
பராசக்தி படத்திற்கு 23 கட்?

பராசக்தி படத்தை பார்த்த சென்சார் குழு, 23 இடங்களை நீக்க பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான காட்சிகளை நீக்கவோ (அ) மாற்றவோ கூறியுள்ளது. அவற்றை நீக்கினால் படத்தின் வரலாற்று தன்மையே சிதைந்துவிடும் என்பதால், இயக்குநர் சுதா கொங்கரா மும்பையில் உள்ள மறுஆய்வுக் குழுவை அணுகியுள்ளாராம். இதனால், இன்று சான்றிதழ் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.


