News June 19, 2024

‘ஜெமினி’ செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

image

ஜெமினி ஏஐ சாட்பாட் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்த கூகுள் அஸிஸ்டன்டுக்கு பதிலாக ஜெமினி செயலியை Default-ஆக மாற்ற வேண்டும். ப்ராப்ளம் சால்விங் திறனில் அட்வான்ஸ்டு நிலையில் உள்ள இச்செயலியை அப்போதுதான் பயன்படுத்த முடியும். கட்டண சேவையாக வழங்கி வந்த ஜெமினி, அட்வான்ஸ்டு பயனாளர்களுக்கு கூடுதலாகச் சில அம்சங்களை வழங்கியுள்ளது.

Similar News

News November 14, 2025

ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங். வெற்றி

image

ராஜஸ்தானின் Anta தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரமோத் ஜெயின் 69,571 வாக்குகள் பெற்று MLA-வாக தேர்வாகியுள்ளார். இதேபோல் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நவீன் யாதவ் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

News November 14, 2025

BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.

News November 14, 2025

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

image

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.

error: Content is protected !!