News March 29, 2025
ஆன்லைனில் e-KYC செய்யும் வழிமுறை

*மாநில ரேஷன் கார்டு போர்ட்டலில் (https://www.tnpds.gov.in/) லாக்-இன் செய்யவும். *உங்கள் ரேஷன் கார்டு எண், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். *e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். “Aadhaar Linking” (அ) “e-KYC Update”-ஐ கிளிக் செய்து விவரங்களை அளிக்கவும். *அதன்பின் வரும் OTP-ஐ உள்ளிட்டு, போட்டோ, ஆவணங்களை அப்லோட் செய்து e-KYC-ஐ சமர்ப்பிக்கவும். வெற்றிகரமாக Submit செய்தபின் உங்களுக்கு மெசேஜ் வரும்.
Similar News
News April 1, 2025
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்

*தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகளில் 5%-10% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. *பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிந்தால் 1% பத்திரப் பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. *செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட UPI ஐடிகளை இன்று முதல் பயன்படுத்த முடியாது. *ஆண்டுக்கு ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. *மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தது.
News April 1, 2025
IPL: பஞ்சாப் vs லக்னோ இன்று மோதல்

நடப்பு ஐபிஎல் சீசனின் 13ஆவது லீக் போட்டியில் இன்று பஞ்சாப், லக்னோ அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இரவு 7.30 அணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதுவரை விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி கனியை ருசித்த ஸ்ரேயஸ் ஐயரின் பஞ்சாப் அணி, இன்றைய போட்டியிலும் வெல்வதற்கு முனைப்பு காட்டும். அதேவேளையில், விளையாடிய 2 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்றுள்ள ரிஷப் பண்டின் லக்னோ அணி, இந்த போட்டியில் வெல்ல போராடும்.
News April 1, 2025
தமிழின வெறுப்பை உமிழும் எம்புரான்: வேல்முருகன் காட்டம்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பதாக வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடும்பள்ளி டேம் என்ற மாற்று பெயரில், இது குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மலையாள சினிமாவில் தொடர்ந்து தமிழின வெறுப்பை உமிழும் கருத்துகள் இடம்பெறுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவும், தமிழர்களை கொச்சைப்படுத்துவதை கைவிடவும் வலியுறுத்தியுள்ளார்.