News March 27, 2025
கலப்பட மஞ்சளைக் கண்டறிவது எப்படி?

தமிழர்களின் பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது மஞ்சள். சுவை & நிறத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. உண்மையான மஞ்சளா என்பதை கண்டறிய, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் கலக்கப்பட்ட நீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் தூய்மையானது. கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அடர்த்தியான மஞ்சளாக இருக்கும்.
Similar News
News November 20, 2025
ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <
News November 20, 2025
ரொனால்டோவுக்கு தங்க சாவி பரிசளித்த டிரம்ப்

ரொனால்டோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் தங்க சாவியை பரிசளித்தார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரொனால்டோ கலந்து கொண்டார். ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு வந்தது மகிழ்ச்சி எனவும், தனது மகன் அவரது தீவிர ரசிகன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
BIG NEWS: தனியாக கட்சி தொடங்கினார்..பெயர் அறிவிப்பு

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


