News September 18, 2025
RAC டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வது எப்படி?

ரயில் புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TTE, உங்களுக்கான இருக்கையை நியமித்து தர வேண்டும் என்ற விதி உள்ளது. *முதலில் TTE-ஐ தொடர்புகொண்டு, காலியாகவுள்ள இருக்கையை ஒதுக்கி தருமாறு முறையிடுங்கள். *Chart தயாரான பிறகு, IRCTC செயலியில் ‘Chart Vacancy’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். *ரயில் எண்ணை உள்ளிட்டால், நீங்கள் செல்லும் ரயிலிலுள்ள காலி இருக்கைகள் காட்டும். *அதை TTE-யிடம் தெரிவித்தும் முறையிடலாம்.
Similar News
News March 5, 2026
இந்தியா பைனலுக்கு செல்லாது: பாகிஸ்தான் வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என பாக்., Ex வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார். இத்தொடரில் இங்கிலாந்து அணி கடினமான சூழ்நிலைகளை கண்டுள்ளது என்றும், இந்தியாவை தோற்கடிக்க ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
தினமும் பாலியல் மிரட்டல் வருகிறது: ஆயிஷா கான்

தன் உடலை பற்றிய கமெண்ட்களே எப்போதும் வருவதால் ஒரு போஸ்ட் போடுவதற்கு கூட யோசிக்கிறேன் என நடிகை ஆயிஷா கான் தெரிவித்துள்ளார். ’துரந்தர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளார். எந்த உடை அணிந்தாலும் தவறு என்கிறார்கள்; தான் உடுத்தும் உடையால் யாருக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 5, 2026
திமுக பேச்சாளர் சிவாஜியின் தண்டனை நிறுத்தி வைப்பு

குஷ்பு மற்றும் கவர்னர் RN ரவி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு <<19141958>>2 ஆண்டுகள்<<>> சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


