News December 7, 2024
UPSC Mains தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி?

IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் UPSC மெயின்ஸ் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்நிலை தேர்வான ப்ரிளிம்ஸ் கிளியர் செய்த 14,627 பேர் செப்., மெயின் தேர்வு எழுதினர். இதில் வெற்றி பெறுபவர்கள் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவர். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in, www.upsconline.nic.in தளத்தில் தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
Similar News
News August 25, 2025
விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.
News August 25, 2025
ஆம்புலன்ஸ் தாக்குதலுக்கு EPS தான் காரணம்: எழிலன்

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
முதல்வரை கத்தியால் குத்த திட்டம்!

டெல்லி CM <<17460200>>ரேகா குப்தாவை<<>> அறைந்த ராஜேஷ் சகாரியா, விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். CM ரேகா குப்தாவை கத்தியால் குத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக கத்தியை வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தெருநாய்களை அகற்றுவதற்கு எதிரான தனது கோரிக்கையை CM ரேகா குப்தா நிராகரித்ததன் காரணமாகவே தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.