News September 9, 2025
ரேஷன் கார்டு வகையை மாற்றுவது எப்படி?

PHH, AYY வகை ரேஷன் கார்டுகளுக்கு அனைத்து ரேஷன் பொருள்களும் கிடைக்கும். NPHH வகைக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் இந்த வகைகள் உள்ளன. இதனை மாற்ற tnpds.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களை உள்ளீடு செய்த பிறகு, குறிப்பு எண் வழங்கப்படும். அந்த எண் மூலம் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே அறியலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ரேஷன் கார்டு வகை மாறிவிடும். SHARE IT
Similar News
News September 10, 2025
ரஞ்சி கோப்பை: TN அணி அறிவிப்பு

அக்டோபர் மாதம் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான TN அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீசன் தலைமையிலான அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித், ஷாருக் கான், விமல், சச்சின் பி, ஆண்ட்ரே சித்தார்த், அம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், அச்யுத், ஹேம்சுதேசன், திரிலோக், அஜிதேஷ் இடம்பெற்றுள்ளனர். TN அணி ரஞ்சி கோப்பையை வென்று 37 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த அணி கோப்பையை வெல்லுமா?
News September 10, 2025
செப்டம்பர் 10: வரலாற்றில் இன்று

*1780 – பொள்ளிலூரில் திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. *1965 – அமிர்தசரஸை கைப்பற்ற பாக். எடுத்த முயற்சி தோல்வி. *1978 – மஞ்சு வாரியர் பிறந்தநாள். *1980 – ரவி மோகன் பிறந்தநாள். *1984 – பாடகி சின்மயி பிறந்தநாள். *2020 – வடிவேல் பாலாஜி மறைந்த நாள்.
News September 10, 2025
பஞ்சாப்பிற்கு ₹1,600 நிதியுதவி : PM மோடி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ₹1,600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட PM, பிறகு குருதாஸ்பூரில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ₹60,000 கோடி நிவாரணம் கேட்ட நிலையில் மிகக் குறைவான தொகை வழங்கப்படுவதாக பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக PM ஹிமாச்சலுக்கு ₹1,500 கோடி நிதியுதவி அறிவித்திருந்தார்.