News November 26, 2024
₹27 கோடியில் பண்ட்-க்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

IPL ஏலத்தில் ₹2 கோடி எனும் அடிப்படை விலைக்கு பட்டியலிடப்பட்ட ரிஷப் பண்ட்டை வாங்க பல அணிகள் போட்டி போட்டன. இறுதிவரை மல்லுக்கட்டிய LSG அணி ₹27 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இத்தொகையை LSG அணி அவருக்கு 3 கட்டங்களாக வழங்கும். இதில், ₹8.1 கோடியை அரசு வரி பிடித்தம் செய்யும். மீதம் ₹18.9 கோடியை அவர் ஊதியமாக பெறுவார்.
Similar News
News August 22, 2025
ஆன்லைன் கேமிங் மசோதா சமூகத்தை காக்கும்: PM மோடி

ஆன்லைன் கேமிங் மசோதா-2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக PM மோடி அறிவித்துள்ளார். இது கேமிங், புத்தாக்கம் மற்றும் படைப்பாக்க மையமாக இந்தியாவை உருவாக்கும் அரசின் உறுதியை காட்டுவதாக தெரிவித்த அவர், இ-ஸ்போர்ட்ஸ், ஆன்லைன் சோஷியல் கேம்ஸ் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே நேரம், பணத்தை வைத்து ஆடும் ஆன்லைன் கேம்களின் கெடு விளைவுகளில் இருந்து சமூகத்தை காக்கவும் உதவும் என்றார்.
News August 22, 2025
விஜய்க்கு ஆசை இருக்கு, செயல் இல்லை: திமுக விமர்சனம்

இன்று தவெக மாநாட்டில் விஜய் தன் பேச்சில், திமுகவை கடுமையாக தாக்கினார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் TKS இளங்கோவன், திமுகவினரை திட்டினால் தான் முதல்வராக முடியும் என விஜய் நினைப்பது கற்பனை என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட விஜய்க்கு தெரியவில்லை என்ற அவர், முதல்வராக ஆசைப்படும் விஜய்யிடம் பேச்சு இருக்கிறது, ஆனால் செயல் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
News August 22, 2025
ராசி பலன்கள் (22.08.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – முயற்சி ➤ மிதுனம் – தடங்கல் ➤ கடகம் – அன்பு ➤ சிம்மம் – உயர்வு ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – கடன்தீரல் ➤ தனுசு – மேன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – ஆதரவு.